ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

’சிரிப்புதான் வருகிறது...’- வெற்றிமாறன், கமல் கருத்துகளுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கொடுத்த ரியாக்‌ஷன்!

’சிரிப்புதான் வருகிறது...’- வெற்றிமாறன், கமல் கருத்துகளுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கொடுத்த ரியாக்‌ஷன்!

தமிழிசை சௌந்திரராஜன்

தமிழிசை சௌந்திரராஜன்

Tamilisai | தமிழர்களின்  அடையாளம் இறை வழிபாடு, சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் எனவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பதிலளித்துள்ளார்.

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார்.

அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கின்றது எனவும் இருளில் முழ்கவில்லை எனவும் தெரிவித்தார். மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது மகிழ்ச்சி என தெரிவித்த அவர், தனியார் மயமாக்கல் என்றதும் , மின்துறையை முழுவதுமாக கொடு்த்துவிடுவதாக சிலர் நினைத்து சமூக வலைதளங்களில் எழுதிவருகின்றனர். ஆனால், அப்படி இல்லை. இதனால்  பொது மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜராஜ சோழன்  குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு  கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதற்கு சிரிப்பதா, என்ன செய்வது என தெரியவில்லை என சிரித்தபடி கூறியுள்ளார்.

மேலும் தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர், கலாச்சார அடையாளங்களை மறைப்பதை, எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கபட்டு இருக்கின்றது. இந்து கலாச்சார  அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின்  அடையாளம் இறை வழிபாடு, சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் எனவும் தெரிவித்தார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Coimbatore, Dr tamilisai soundararajan, Kamalhaasan, Kovai, Ponniyin selvan, Raja Raja Chozhan, Tamilisai, Tamilisai Soundararajan