ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பி.டி. உஷா அகாடமியில் பணிபுரிந்த கோவை வீராங்கனை மரணம்.. நீதி விசராணைக்கு பெற்றோர் கோரிக்கை!

பி.டி. உஷா அகாடமியில் பணிபுரிந்த கோவை வீராங்கனை மரணம்.. நீதி விசராணைக்கு பெற்றோர் கோரிக்கை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Woman Assistant Coach jayanthi found dead: விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய ஜெயந்தி பல்வேறு பதக்கங்களை வாங்கி உள்ளார். கூடிய விரைவில் ஒலிம்பிக் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வாங்கிட முயன்று வந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனையும் , மாநிலங்களைவை உறுப்பினருமான பி.டி உஷா நடத்தி வரும் அகாடமியில் பணி புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரங்கனை ஜெயந்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்த வீராங்கனையின் பெற்றோர் கூறுகின்றனர்.       

  கோவை கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இயங்கி வரும் உஷா ஸ்கூல் ஆப் அத்தலடிக்ஸ் அக்காடமி உள்ளது. இங்கு  ஜெயந்தி (28) கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சியாளர்களாக பணி புரிந்து வருகிறார். 

  இந்த அகாடமி மாநிலங்களவை உறுப்பினர் பி.டி .உஷாவின் அகாடமி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயந்தி கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 28 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஜெயந்தி தாயார் கவிதாவின் கைபேசிக்கு  அக்காடமியில் அலுவலக தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் ஜெயந்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறி உடனடியாக கிளம்பி வருமாறு தெரிவித்துள்ளனர்.

  கோழிக்கோடுற்கு ஜெயந்தியின் தம்பி மணிகண்டன் மற்றும் அவர்களது உறவினர் இருவர்  இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர். அங்கே சென்ற போது ஜெயந்தியின் உடல் ஸ்ட்டச்சரில்  வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அகாடமி நிர்வாகத்தினர் ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

  உயிரிழந்த பெண்ணின் தாயார்

  இது குறித்து கேரளா போலீசார் அங்கிருந்த மூன்றாம் நபரிடம்  புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்து ஜெயந்தி உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து  உடலை அவரது தம்பி மணிகண்டனிடம் ஒப்படைத்து உள்ளனர்.

  இது குறித்து கேரளா போலீசார் மணிகண்டன் இடம் பிரேத பரிசோதனை செய்வதற்கான சான்றை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளனர். சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக நேற்று காலை தொண்டாமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் ஜெயந்தி உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் அருகில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.  ஆனால், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனக் கூறி தகனம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். படிப்பறிவு இல்லாமல், விளிம்பு நிலையில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த  மனவேதனை அடைந்தனர். மேலும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களை கொண்டு பேசி ஒரு வழியாக உடலை தகனம் செய்தனர்.

  இது குறித்து செய்தியாளரிடம் ஜெயந்தி உறவினர்கள் பேசுகையில் உடல் வலிமையும் மன தைரியம் உடைய ஜெயந்தி தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. கேரளா காவல்துறை முறையாக விசாரணை செய்யாமலும் ,வேறொரு நபரிடம் புகார் மனு பெற்று பிரேத பரிசோதனை செய்து இருப்பது அவசர அவசரமாக உடலை ஒப்படைத்து உள்ளனர்.

  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய ஜெயந்தி பல்வேறு பதக்கங்களை வாங்கி உள்ளார். கூடிய விரைவில் ஒலிம்பிக் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் நாட்டிற்காக வாங்க கூடிய விளையாட்டு வீராங்கனை இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும். தமிழக அரசு மற்றும் கேரளா அரசு இரண்டும் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து ஜெயந்தி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

  மேலும் தற்போது கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல்  மாநிலத்தை கடந்து பிரேதம் கொண்டுவரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.செய்தியாளர்

  செய்தியாளர்: வைரபெருமாள் அழகுராஜன்   

  Published by:Salanraj R
  First published:

  Tags: Coimbatore