முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம்

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம்

கோவை மின் கட்டண உயர்வு - போராட்டம்

கோவை மின் கட்டண உயர்வு - போராட்டம்

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 30 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 25,000க்கும்  மேற்பட்ட சிறு குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 20  சிறு, குறுதொழில் அமைப்புகளை சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் பங்கேற்று கதவடைப்பு செய்துள்ளனர்.

காலை 6 மணி முதலே சிறு, குறு தொழில் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே டாடாபாத் பகுதியில் போசியா அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 20 தொழில் அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். சிறு, குறு தொழில் கூடங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்திற்கு பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,  சிறு, குறு தொழில் கூடங்களுக்கு நிலைகட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்ற இரு முக்கிய  கோரிக்கைகளை  முன்வைத்து வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டமானது நடத்தப்பட்டு வருகின்றது.

Also see... EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்... மின்சார வாரியம் அறிவிப்பு..

top videos

    அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 30 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, EB workers, Strike