ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

102 வயது மூதாட்டியின் உடலை புதைக்க எதிர்ப்பு... கோவை அருகே நடந்தது என்ன?

102 வயது மூதாட்டியின் உடலை புதைக்க எதிர்ப்பு... கோவை அருகே நடந்தது என்ன?

போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

Coimbatore District News : கோவை அன்னூர் அருகே இறந்த 102 வயது மூதாட்டி  உடலை பொது மயானத்தில் புதைக்க ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், உடலை ரோட்டில்  வைத்து இரவு முழுவதும்  தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராம  காலனியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 102 வயதான ரங்கம்மாள் என்ற மூதாட்டி நேற்று (3.12.22) காலை இறந்தார்.

இந்நிலையில், இறந்த மூதாட்டியின் உடலை ஒண்ணக்கரசம்பாளையம் பொது மயானத்தில் புதைப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, மூதாட்டியின் உடலை புதைக்க அப்பகுதியை சேர்ந்த ஒரு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை சாலையின் நடுவில் வைத்து தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : தமிழக அரசின் எதிர்ப்பால் கோவை ஈஷா மையத்தில் நடக்கவிருந்த ஜி-20 நிகழ்ச்சி ரத்து: நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாலை 5 மணி முதல் இறந்த மூதாட்டியின் உடலை ரோட்டில் வைத்து  கிராம மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

செய்தியாளர் : குருசாமி - கோவை

First published:

Tags: Coimbatore, Local News