கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் இரவு நேரங்களில் மதுபோதையில் பொதுமக்களை பல்வேறு காரணங்களைச் சொல்லி தாக்குவது வாடிக்கையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஒரு பேருந்தில் மூன்று முதல் நான்கு நடத்துனர்கள் இருந்து கொண்டு பயணிகளை பல்வேறு விதங்களில் மிரட்டுவதும் தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.மேலும், சாலையில் பயணிக்கும் பொதுமக்களையும் பயணிகளையும் தனியார் பேருந்து நடத்துனர்கள் தாக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூகவலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
காவல்துறை சார்பில் போதுமான நடவடிக்கை இல்லாததாலும், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தனியார் பேருந்துகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் பயணிகளைத் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மதுபோதையில் பேருந்து நிலையத்துக்குள் நின்று ரவுடியிசம் செய்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நேற்று இரவு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர், பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசி, தாக்குதல் நடத்தி, மதுபோதையில் ரவுடியிசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
Must Read : சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் - பெரும்பாலான மக்கள் கருத்து
தனியார் பேருந்துகளின் அட்டகாசத்தை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் - ஜெரால்ட், கோவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Bus, Coimbatore, Dispute