முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கேரளாவில் இருந்து விசாரணைக்கு அழைத்து வந்த கைதி கோவையில் தப்பி ஓட்டம்... தேடுதல் வேட்டையில் போலீசார்...

கேரளாவில் இருந்து விசாரணைக்கு அழைத்து வந்த கைதி கோவையில் தப்பி ஓட்டம்... தேடுதல் வேட்டையில் போலீசார்...

தப்பி ஓடிய கைதி அனிஷ்

தப்பி ஓடிய கைதி அனிஷ்

Coimbatore | கேரளாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து வந்து விட்டு திரும்பும் போது அனிஸ் பாபு என்ற கைதி கோவை ரயில் நிலையத்தில் தப்பி ஓடினார். இதுகுறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ் பாபு. இவர் மீது பாலக்காடு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகத்தில் திருப்பத்தூர் உட்பட சில பகுதிகளிலும் திருட்டு, வழிப்பறி  வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில் கைதாகி இருந்த அனீஸ்பாபு பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவரை  வழக்கு விசாரணைக்காக கேரள போலீசார்  திருப்பத்தூர் அழைத்து சென்றனர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் ரயில் மூலம் பாலக்காடு திரும்பிக்கொண்டு இருந்தனர். கோவை ரயில் நிலையத்திற்கு  ரயில் வந்த பொழுது அனிஷ்பாபு தப்பி ஓடினார். அவரை விரட்டிப் பிடிக்க கேரள போலீசார் முயன்றும் முடியவில்லை.

Also see... பிரதமர் மோடி - புதுவை முதல்வர் சந்திப்பு..

கேரளா போலீசார் இது தொடர்பாக கோவை ரயில்வே  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள போலீசாரிடம் இருந்து கைதி அனீஸ்பாபு தப்பி ஓடிய சம்பவம் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Coimbatore, Kerala, Prisoner