ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நாளை (20-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

மின்தடை பகுதிகள்:

பெதப்பம்பட்டி, ஆலமரத்தூர், அம்மாபட்டி, அணைக்கடவு, சோமவாரப்பட்டி, கொங்கல்நகர், லிங்கமநாயக்கன்புதூர், மூலனூர், விருகல்பட்டி பகுதி, ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு, மாரிகந்தை, இலுப்பநகரம் மற்றும் சிங்கனூத்து ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown