ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்ட மக்களே உஷார்... நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

கோவை மாவட்ட மக்களே உஷார்... நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் குப்பேபாளையம் மற்றும் பட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (17-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குப்பேபாளையம்:

ஒன்னிப்பாளையம், சிங்காரம் பாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளி பாளையம், புகழூர் (ஒரு பகுதி) வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சி பாளையம், கதவு கரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டி காலிபுதூர், ரங்கப்ப கவுண்டன் புதூர் மற்றும் முணுகட்டியூர்.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

பட்டினம்:

பட்டினம் புதூர், பீடம் பள்ளி, (ஒரு பகுதி) சத்திய நாராயணபுரம், காவிரி நகர் ஸ்டேன்ஸ்காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலூர் ஒரு பகுதி, பட்டினம் மற்றும் நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown