ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

கோவை மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

கோவையில் மின் தடை

கோவையில் மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை பீளமேடு துணை மின்நிலையத்தில் நாளை (14-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அப்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சிவதாஸ்தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர் காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி.மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லேஅவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

இதேபோல, எல்லைத் தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணிய நகர், பாலகுரு காா்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பாா்சன் குடியிருப்பு, ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown