ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் மெட்ரோ-இருகூர் பகுதிகளில் நாளை மறுநாள் (23-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் அன்று மாலை மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown