முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / உஷார்... கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

உஷார்... கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Coimbatore District | கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (15-12-2022) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

மின் தடை பகுதிகள்:

பொள்ளாச்சி கோமங்கலம், ஜி.புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, முக்குஜல்லிப்பட்டி, சீலகம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, குளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், கோலார்பட்டி, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி மற்றும் போசாரிபட்டி ஆகிய இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown