ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

 இளைஞர் சல்மான்

இளைஞர் சல்மான்

Coimbatore News: பொள்ளாச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில்  கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம்  சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நிலையில் நண்பர்களிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.

கடன் வாங்கிய பணத்தில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடியுள்ளார். இதில் மொத்த பணத்தையும் அவர் இழந்ததாக தெரிகிரது.  பணத்தை இழந்த விரக்தியில் இருந்த சல்மான் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read:  தூத்துக்குடியில் திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்..

இளைஞர் தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார்  சல்மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

First published: