முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / அச்சுறுத்தும் சுள்ளி கொம்பன் யானை- அச்சத்தில் பொள்ளாச்சி மக்கள்

அச்சுறுத்தும் சுள்ளி கொம்பன் யானை- அச்சத்தில் பொள்ளாச்சி மக்கள்

சுள்ளி கொம்பன் யானை

சுள்ளி கொம்பன் யானை

சுள்ளி கொம்பன் யானை பொள்ளாச்சி வால்பாறை சாலையில்  அட்டகாசங்களை செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Valparai, India

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் சுற்றித் திரியும் ஒற்றைக்காட்டு யானை சுள்ளி கொம்பனால் பொதுமக்கள் அச்சம்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் கேரளாவில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார் அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

அவ்வப்போது பொள்ளாச்சி வால்பாறை சாலையில்  அட்டகாசங்களை செய்து வருகிறது.  இந்த யானையை ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் சுழற்சி முறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதனை அடுத்து ஆழியார் அறிவு திருக்கோயில் அருகே இரவு ஒற்றை யானையான சுள்ளி கொம்பன் உலா வந்தது. ஒற்றை யானை தங்களை தாக்குமோ என்ற பயத்தில் இருந்த மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், வாய்க்கால் மேடு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது வீடுகளுக்கு முன்பு தீயிட்டு தங்களை பாதுகாத்து கொண்டனர். அப்பகுதியில் வந்த யானை தீ பற்றி எரியவதை கண்டு குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் வந்த வழியிலேயே மீண்டும் திரும்பிச் சென்றது.

இந்நிலையில் பகல் நேரங்களில் தங்களை யானையிடமிருந்து காத்துக் கொண்டாலும் ,இரவு நேரத்தில் யானை தங்களது வீடுகளுக்கு சேதாரத்தை ஏற்படுத்தி, உயிர்பலி ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தங்களது வீடுகளுக்கு முன்பு தீயை இட்டு வாழ்க்கையை கழிக்கின்றனர்..

செய்தியாளர் - ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Pollachi, Tamil News