முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பொள்ளாச்சி வழக்கு... அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணை..!

பொள்ளாச்சி வழக்கு... அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணை..!

வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

Pollachi Sexual Harresment Case | இந்த விவகாரத்தில் 9 பேர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, விசாரணை நடத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

2019ம் ஆண்டில் பொள்ளாச்சியை ஒட்டிய பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வழக்கினை முதலில் தமிழ்நாடு காவல்துறையும், பின்னர் சிபிசிஐடி பிரிவும் விசாரித்தனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் பொள்ளாச்சி அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ,அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் 9 பேர் மீது தனியாக வழக்கு பதிவு செய்த சிபிஐ, விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்பு நேற்று முன்தினம் காணொலி வாயிலாக விசாரணை நடைபெற்றது. கைதாகி சிறையில் உள்ள 9பேரும் காணொலியில் ஆஜராகினர்.

அரசு தரப்பு சாட்சி நேரில் ஆஜரானதுடன் சம்பவம் குறித்து நீதிபதியிடம் விளக்கினார். குறிப்பிட்ட இந்த சாட்சி விசாரணை, மூடிய நீதிமன்ற அறையில் நடைபெற்றது. மற்றொரு சாட்சி அடுத்த மாதம் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

First published:

Tags: CBI, Crime News, Pollachi sexual harassment