முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பீடி பிடித்து வீசியதால் ஏற்பட்ட காட்டுத்தீ.. சந்தனமர கடத்தலில் சிக்கிய பீடி ஆசாமி!

பீடி பிடித்து வீசியதால் ஏற்பட்ட காட்டுத்தீ.. சந்தனமர கடத்தலில் சிக்கிய பீடி ஆசாமி!

கைது செய்யப்பட்ட   நபர்

கைது செய்யப்பட்ட நபர்

Pollachi Sandelwood Theft | 16 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய நபரை கைது செய்து சந்தன மரங்களை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி வனச்சரத்துக்குட்பட்ட வெடிகாரன்பாலி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்ததைக் கண்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த சாக்கு பையை வனத்துறையினர் சோதனை செய்தபோது சாக்கு பையில் சந்தன கட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.

பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பெயரில் வனப்பகுதிகள் சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை வெட்டி கடத்தி வந்த நபரை பொள்ளாச்சி வன உட்கோட்டத்துக்குட்பட்ட வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் வெட்டி கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டன.

மேலும் இந்த சந்தன கட்டைகளை கடத்தி வனப்பகுதியில் வரும் பொழுது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வால்பாறை அருகே உள்ள அக்காமலை வனப்பகுதியில் வந்து ஓய்வெடுக்கும் பொழுது இவர் புகை பிடித்துள்ளார்.

அப்போது அந்த புகைப்பிடித்த பீடியை அணைக்காமல் வனப்பகுதிக்குள் வீசியதால்தான் கடந்த இரண்டு நாட்களாக பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது எனவும் வனத்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் வைத்திருந்த சாக்குப்பையில் இருந்த சுமார் 16 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ம.சக்திவேல்

First published:

Tags: Coimbatore, Local News, Pollachi