ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தனியாக இருக்கும் பெண்களே டார்க்கெட்.. வீடு புகுந்து திருடும் கல்லூரி மாணவர்கள் - பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்

தனியாக இருக்கும் பெண்களே டார்க்கெட்.. வீடு புகுந்து திருடும் கல்லூரி மாணவர்கள் - பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்

கைது செய்யப்பட்ட 2 கல்லூரி மாணவர்கள்

கைது செய்யப்பட்ட 2 கல்லூரி மாணவர்கள்

Pollachi Robbery case | தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பநாதன் மற்றும் லியோஜெபிரியன் என்ற கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பெண்களிடம் வழிப்பறி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அருகே உள்ள வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி காட்டி மிரட்டி நகை பறித்துச் சென்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் வித்யா. கடந்த வாரம் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கத்தியைக் காட்டி 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்

இந்த நிலையில் நேற்று மாலை கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி முன்பு போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பேரின்பநாதன் மற்றும் லியோஜெபிரியன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள மெரைன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.  இவர்கள் கிணத்துக்கடவு  லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்ததும் அப்போது அப்பகுதியில் நோட்டமிட்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் 3 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் கைது செய்யபட்ட இருவரையும் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

First published:

Tags: Coimbatore, Crime News, Local News, Pollachi, Tamil News