Home /News /coimbatore /

தடையில்லா சான்றுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய உதவி செயற்பொறியாளர்

தடையில்லா சான்றுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய உதவி செயற்பொறியாளர்

 லஞ்சம்

லஞ்சம்

Pollachi : ரசாயனம் தடவிய ரூ.30,000 பணத்தை பெறும்போது கையும் களவுமாக சிக்கினார்.

    பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க  லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

    பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வேங்கை பகுதியை சேர்ந்தவர்  செல்வ பிரபு. இவர் தனது நிலத்திற்கு DTCP தடையில்லா ஒப்புதல் சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் 2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெற மனமில்லாத செல்வ பிரபு இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு‌ போலீசாரிடம் செல்வபிரபு புகார் அளித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய பணம் 30 ஆயிரத்தை பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம்செல்வ பிரபு வழங்கியுள்ளார். பின்னர் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக‌ அலுவலகத்திற்கு புகுந்து செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.

    இதனை அடுத்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் ஆய்வாளர்கள் லதா மற்றும் பரிமளா மற்றும் காவலர் அபி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம் நேற்று மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை சுமார் 9 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உதவி பொறியாளர் செந்தில்குமார் இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்று அவரது வீட்டிலும் சோதனை செய்த பிறகு கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை நீதிமன்ற காவலுக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்..

    செய்தியாளர்  : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Bribe, Pollachi

    அடுத்த செய்தி