தமிழகம் ரத்தக்காடாக மாறிவிட்டது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
பொள்ளாச்சி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “ எம்ஜிஆரின் உண்மையான வாரிசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என தீர்வு எப்படி செய்யப்பட்டதோ அதேபோல அம்மாவின் உண்மையான அரசியல் வாரிசு எடப்பாடியார் தான் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
விரைவில் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் அதிமுக பெயரும் எடப்பாடி யார் தலைமைக்கு தான் கிடைக்கும் வேறு யாருக்கும் உரிமையில்லை. சமீப காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்ச உணர்வோடு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்ககள். காவல்துறை செயல் இழந்து விட்டது.
Must Read : முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்
தமிழகம் ரத்தக்காடாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தனியாக வசிக்கும் கணவன் மனைவியிடம் நகைகளை கொள்ளை அடித்து கொலை செய்யும் சம்பவங்கள் சென்னிமலையில் தொடங்கி தென்காசி வரை நடந்து கொண்டிருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் ஏற்கனவே சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டு ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது மின் கட்டண உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். ..
செய்தியாளர் - ம.சக்திவேல், பொள்ளாச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.