Home /News /coimbatore /

கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Pollachi : சிறுமிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாங்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடைக்காரர், எங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில்  பள்ளி சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் ரீதியான தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை சிறுமிகள் யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு  முன்பு அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் தலைமையில் பாலியல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியரிடம் நாங்கள் வசிக்கும் பகுதியில் மளிகை கடைக்காரர், எங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மளிகை கடைக்காரர் நடராஜனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளிலும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: சக்திவேல், பொள்ளாச்சி
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Pocso, Pollachi, Pollachi sexual harassment

    அடுத்த செய்தி