ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பொள்ளாச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம்... பசுமாட்டை மிதித்து கொன்ற கொடூரம்!

பொள்ளாச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம்... பசுமாட்டை மிதித்து கொன்ற கொடூரம்!

கடைகளை சூறையாடிய யானைகள்

கடைகளை சூறையாடிய யானைகள்

Pollachi | சிறிய கடைகளை மட்டுமே நம்பி வாழ்ந்த வியாபாரிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi | Coimbatore

  பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகளால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை இடித்தும் ரேஷன் கடைகளை இடித்தும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வந்தது.

  இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள கூழங்கள் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். அப்பகுதியில் வியாபாரிகள் சிறிய பெட்டிக்கடைகளை  வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டுயானைகள் கூட்டம் கூழங்கள் பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளே இருந்த உணவுப் பொருட்களை சூறையாடி சாப்பிட்டு சென்றுள்ளது. அதேபோல் அப்பகுதியில் இருந்த பசுமாட்டை பலமாக தாக்கி கொன்றுள்ளது.

  ALSO READ | என்னயா பகல் கொள்ளையா இருக்கு..? மருத்துவமனை எதிரே நின்ற ஆம்புலன்ஸுக்கு ரூ.500 அபராதம் விதித்த போலீசார்! கோவையில் அதிர்ச்சி!

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடைகளை அனைத்தையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தியதால் சிறிய வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Elephant, Pollachi