ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

மங்களூரு ஆட்டோ வெடி விபத்து.. கோவை லாட்ஜில் சந்திப்பு.. சிக்கும் உதகை டீச்சர்..? தொடரும் விசாரணை!

மங்களூரு ஆட்டோ வெடி விபத்து.. கோவை லாட்ஜில் சந்திப்பு.. சிக்கும் உதகை டீச்சர்..? தொடரும் விசாரணை!

மங்களூரு குண்டு வெடிப்பு

மங்களூரு குண்டு வெடிப்பு

சாரணையில் குக்கர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர் ஷிவமோகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகம்மது ஷாரீப் என கர்நாடகா டிஜிபி பிரவீன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற ஆட்டோ வெடி விபத்து தாக்குதலும் கோவை கார் வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியான தாக்குதல் என தெரியவந்த நிலையில், இது தொடர்பாக கோவை தனியார் பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  கர்நாடக மாநிலம், மங்களூரு அருகேயுள்ள நாகுரி பகுதியில் சனிக்கிழமை மாலை சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

  இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்தவரும் படுகாயமடைந்தனர். தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குக்கருடன் பேட்டரி மற்றும் பயங்கரவாதிகள் உருவாக்கிய சர்க்யூட் பாக்ஸ் இருந்ததும் தெரியவந்தது.

  இந்நிலையில் ஆட்டோ வெடித்தது தீ விபத்து அல்ல என்றும், அது பயங்கரவாத தாக்குதல் எனவும், கர்நாடகா மாநில டிஜிபி பிரவீன் சூட் டிவிட்டரில் பதிவிட்டார். தொடர் விசாரணையில் ஆட்டோவில் குக்கருடன் பயணித்த நபர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும். அவர் ரயில்வே ஊழியரான பிரேம்ராஜ் என்பவரின் ஆதாரை திருடி, மைசூரில் வாடகை வீட்டில் இருந்ததும் தெரியவந்தது.

  அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடி பொருட்கள், வெடிமருந்து செய்ய தேவையான ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

  இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மங்களூரு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கோவை சென்றுவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

  பிற்போக்கு பயங்கரவாதக் கருத்தைப் பரப்பும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் - முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை 

  இதனிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கும் மங்களூரு சம்பவத்துக்கும் சில ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்தது. கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே முபின் சென்ற கார் வெடித்தது. மங்களூருவில் துர்கா பரமேஸ்வரி கோயில் அருகே ஆட்டோ வெடித்துள்ளது.

  மேலும் விசாரணையில் குக்கர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர் ஷிவமோகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகம்மது ஷாரீப் என கர்நாடகா டிஜிபி பிரவீன் தெரிவித்துள்ளார். லக்ஷர் இ தொய்பா அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஷாரீபை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

  ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு… வைரலாகும் வீடியோக்கள்… 

  மங்களூரு சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்த சுரேந்தர் என்பவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சுரேந்தரும், ஷாரீப்பும் 1 மாதத்திற்கு முன்பு கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தனியார் பள்ளி ஆசிரியரான சுரேந்தரை கோவை அழைத்து வந்து உதகை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தான் குக்கர் ஷாரீப்பிற்கு வாங்கி கொடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இச்சூழ்நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த 4 அதிகாரிகளை கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Coimbatore, Terror Attack