டிவிட்டரில் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்டதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதியன்று அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாபர் மசூதி இடிப்பு குறித்து சர்ச்சை போஸ்டர் ஒன்றை பகிர்ந்த்திருந்தார்.
அந்த போஸ்டரில், டிசம்பர் 6 அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றி திருநாள்!! என்றும் வாசகங்கள் இருந்தன. மேலும், அயோதியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டிட சபதமேற்போம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
Jai Sri Ram pic.twitter.com/fjSKCxsWqz
— Arjun Sampath (@imkarjunsampath) December 5, 2022
அர்ஜூன் சம்பத்தின் இந்த ட்வீட்டர் பதிவை பகிர்ந்த தடா ரஹீம் என்பவர், “அடிமை சின்னம் அகற்றப்பட்ட நாள் என்று நீங்கள் போடுவது சரி என்றால், பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச் சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிக்க : அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டேன் - நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த அர்ஜூன் சம்பத்
இந்த ட்வீட் குறித்து காவல்துறை கவனத்திற்கு வந்த பிறகு, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அர்ஜுன் சம்பத், தடா ரஹீம் ஆகிய இருவர் மீதும், 153A(1)a ,505(2) என்ற இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arjun Sampath, Babar Majid, December 6, Tweet