ஹோம் /நியூஸ் /Coimbatore /

மோடி முதலையை பிடித்த சம்பவம் பாடப் புத்தகத்தில் சேர்ப்பு

மோடி முதலையை பிடித்த சம்பவம் பாடப் புத்தகத்தில் சேர்ப்பு

பாடப்புத்தகத்தில் மோடி

பாடப்புத்தகத்தில் மோடி

மோடி 14 வயது  சிறுவனாக இருந்த போது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்று போது  ஒரு முதலைக் குட்டியை பார்த்து அதை தனது  வீட்டுக்கு கொண்டு வந்தாகவும்,  இது தவறு என்று என தனது  அம்மா உணர்த்தியதை தொடர்ந்து அந்த முதலையை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர  மோடி தனது சிறு வயதில் முதலையை  பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம்  ஒன்றாம் வகுப்பு மெட்ரிக் பாடபாடப்புத்தகத்தில்  இடம்பெற்றுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த ஆண்டு  சாகச விரும்பியும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பியர் கிரில்ஸும், இந்திய பிரதமர் மோடியும்  சாகச காட்டுப் பயணம் மேற்கொண்டனர்.  இந்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மோடி தனது சிறுவயதில் நடந்ததாக சொன்ன சம்பவம்  சமூகவலைதளங்களில் பேசு பொருளானது. நரேந்திர மோடி 14 வயது  சிறுவனாக இருந்த போது உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்று போது  ஒரு முதலைக் குட்டியை பார்த்து அதை தனது  வீட்டுக்கு கொண்டு வந்தாகவும்,  இது தவறு என்று என தனது  அம்மா உணர்த்தியதை தொடர்ந்து அந்த முதலையை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் - ஆணையத் தலைவர் திட்டவட்டம்

இந்நிலையில் பிரதமர் மோடி சொன்ன முதலை கதை ஒன்றாம் வகுப்பு மெட்ரிக்  பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் இந்த தகவல் குழந்தைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது முதலை குறித்த தகவல்கள் மற்றும் மோடி படத்துடன்  அவர் கூறிய  முதலை கதை ஆகியவை பாடமாக இடம் பெற்றுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Crocodile, PM Narendra Modi