Home /News /coimbatore /

பெரியார் - மோடி பிறந்த நாளில் போஸ்டர் யுத்தம்..! - வைரலாகும் சுவரொட்டிகள்

பெரியார் - மோடி பிறந்த நாளில் போஸ்டர் யுத்தம்..! - வைரலாகும் சுவரொட்டிகள்

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவையில் பல்வேறு இடங்களில் பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு போட்டிக்கு போட்டியாக பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
பெரியார் - மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில்  திமுக - பா.ஜ.க கட்சியினர் முக்கிய இடங்களில் பெரிய சைஸ் சுவரொட்டிகளை ஒட்டி போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

கோவையில் தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களும், பிரதமர் மோடி பிறந்த நாளை பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு கோவை டவுன்ஹால், லங்கா கார்னர் பகுதிகளில் பாஜக சார்பில் "உலகமே உற்று நோக்கும் தேசிய மாடல் தலைவனே" என  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்


மோடியின் சாதனைகளை குறிப்பிட்டுள்ள அவர்கள், "குடும்ப அரசியல் திராவிட மாடல், ஜனநாயக அரசியல் தேசியமாடல்"என்றும் பிரதமர் மோடி , அண்ணாமலை,வானதி சீனிவாசன் படங்களுடன் சுவரொட்டிகளை பா.ஜ.கவினர்  ஒட்டியுள்ளனர்.

பெரியார் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்


இதே போல பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில் பெரியார் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது."எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் பெரியார்,அண்ணா, கருணாநிதி,ஸ்டாலின் ஆகியோர்  புகைபடங்களுடன் சுவரொட்டிகளானது லங்கா கார்னர், கோட்டை மேடு,உக்கடம், உப்பிலிபாளையம் மேம்பாலம் உட்பட  ஒட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க, திமுக  கட்சியினர் முக்கிய இடங்களில் பெரிய சைஸ் சுவரொட்டிகளை ஒட்டி கோவையில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்
Published by:Arunkumar A
First published:

Tags: Coimbatore, Modi Birthday, Periyar Birthday, PM Modi

அடுத்த செய்தி