Home /News /coimbatore /

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிவந்து மொட்டையடித்து துன்புறுத்தல்.. ஆட்கடத்தலா? - கோவை தன்னார்வ அமைப்பினரிடம் விசாரணை

மொட்டை அடித்து, அடைத்துவைத்து துன்புறுத்தல்

மொட்டை அடித்து, அடைத்துவைத்து துன்புறுத்தல்

Coimbatore : கோவையில், ஆதரவற்றவர்கள் மட்டுமல்லாமல் சாலையில் தூங்கிய பணியாளர்கள், பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள் உள்ளிட்டோரை தூக்கி வந்து, மொட்டை அடித்து, அடைத்து வைத்து துன்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    கோவை கடந்த 2 மாதங்களாக, சாலை ஓரத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களை மீட்டு, உரிய சிகிச்சை மற்றும் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களை தன்னார்வ அமைப்பினர் மீட்டு, கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில்  உள்ள அட்டுக்கல் வனப்பகுதி மலை அடிவாரத்தில் வருவாய்துறையால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான கிறிஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடைத்து வைத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், உள்ளூரில் சிலர் மாயமானதாகவும், சாலையில் பேருந்துக்காக காத்திருந்தவர்களை தன்னார்வலர்கள் தூக்கி வந்து அவர்களை துன்புறுத்தி வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து உள்ளூர் மக்கள் அங்கு சென்று பார்த்த போது  அனைவரும் மொட்டை அடித்து சுமார் 10, 16 அறையில் 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள்  தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் அளித்தனர். அங்கே விரைந்து வந்த போலீசார் ஆட்களை அழைத்து வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆதவற்றவர்கள் மட்டுமல்லாமல் சாலையில் தூங்கிய பணியாளர்கள், பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள் உள்ளிட்டோரை தூக்கி வந்து அடைத்து வைத்திருந்ததும், அதில் சிலர் தாக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து, அங்கு அடைக்கப்பட்டிருந்தவர்கள் கூறுகையில்,  தோட்ட வேலைகளுக்கு சென்றபோது இங்கே தூக்கி வரப்பட்டதாக சிலர் கூறினர். கோவை காந்திபுரம் பகுதிகளில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், பணி முடிந்து வந்த போது வலுகட்டாயமாக விசாரிக்காமல் தூக்கி வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், கோவில் முன்பு அமர்ந்து இருந்தவர்கள், பேப்பர் படித்து கொண்டு இருந்த சிலரை சிலர் வழுக்கட்டாயமாக வாகனத்தில் இழுத்து கொண்டு வந்ததாகவும், இங்கு வந்தவுடன் கையில் இருந்த பொருட்கள் பணம் செல்போன் போன்றவை பறித்து கொண்டு தீவைத்து எரித்து அனைவருக்கும் மொட்டை அடித்தாகவும் தெரிவித்துள்ளனர்.

    மொட்டையடித்து துன்புறுத்தப்பட்டவர்கள் மீட்பு


    மேலும், சத்தம் போட்ட சிலரை பைப்பு, குச்சி கொண்டு கண்மூடி தனமாக தாக்கிதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் போலீஸார் அங்கிருந்தவர்களை பார்த்த போது, சிலர் காயங்களுடன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் வட்டாச்சியர் காந்திமதி, கடத்தி வரப்பட்டவர்களிடம் பெயர் விலாசம் வாங்கி கொண்டு போலீசார் உதவியுடன் வாகனத்தில் அவர்களை காந்திபுரம் பகுதிக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாகனத்தை கவிழ்த்த போராட்டக்காரர்கள்


    இந்நிலையில் தகவலறிந்து அங்கு வந்த இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், தனியார் விடுதியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் கொண்டு வந்த வாகனத்தையும் கவிழ்த்தியதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரண் மற்றும் மாவட்ட எஸ்,பி. பத்ரிநாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    Must Read : செஸ் விளையாட்டின் போது 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ..

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரண் உத்தரவின் பேரில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 131 நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குடும்பம் உள்ளவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விடுவித்து வருகின்றனர். மேலும், ஆதரவற்றவர்களை அரசு காப்பகங்களிலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்த தன்னார்வர்கள் 10 பேரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உதவி ஆணையாளர் தலைமையில் போலீஸ் குழு அட்டுக்கல் தனியார் விடுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - வைரபெருமாள் அழகுராஜன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Kidnap, Torture

    அடுத்த செய்தி