ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்... வைரலாகும் புகைப்படம்...

மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்... வைரலாகும் புகைப்படம்...

மைல் கல்லுக்கு ஆயூத பூஜை கொண்டாடிய ஊர் மக்கள்

மைல் கல்லுக்கு ஆயூத பூஜை கொண்டாடிய ஊர் மக்கள்

Coimbatore | ஆயுதபூஜையொனட்டி கோவை தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி அருகே மயில் கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்டு ஊர் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் எனச் சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்துப் படையலிடுவது வழக்கம். நிறுவனங்களில் ஆயுத பூஜையை வேலை நாட்களிலேயே தொழிலாளர்களோடு கொண்டாடுவார்கள்.

  அந்த வகையில் நேற்றே பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு படையலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆயுத பூஜையை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். பேரூர் சிறுவாணி சாலை பூலுவபபட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய மைல் கல்லை எடுத்து புதிய மைல்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் வாழை இலையில் படையல் வைத்து வழிபாடும் நடத்தினர்.

  Also see... விடுதலை வரலாற்றில் பெண் ஆளுமை தினம் இது!

  ஆயுத பூஜையையொட்டி  மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி, வாழை மரக்கன்றுகள் கட்டி, சந்தன பொட்டு, திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

  செய்தியாளர்: வைரம்பெருமாள் அழகுராஜா

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ayudha poojai, Coimbatore