Home /News /coimbatore /

திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்று கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது: வானதி சீனிவாசன்

திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்று கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களிலும்  தேசிய கொடி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் ஆதரவற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சட்டவிரோதமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை காந்திபுரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும், வரும் ஆகஸ்ட் 15 தேதி வீட்டில்  தேசிய கொடி ஏற்றவும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தேசிய கொடி தயாரிப்பு தொடர்பான விதி முறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, பாலியஸ்டர், பட்டு என அனைத்து துணிகளிலும் தேசிய கொடி தயாரிக்கலாம் எனவும் அதற்குரிய மரியாதையுடன் ஏற்ற வேண்டும் எனவும் வழிகாட்டுதல் கொடுத்துள்ளது என தெரிவித்தார். அதிகமான மக்கள் 13 தேதி முதல் 15 ம் தேதி வரை ஏற்ற இருக்கின்றனர் எனவும், கொடிகள் எளிதாக மக்களுக்கு  கிடைக்க கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடிக்கான கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது, அதில் அட்டை பெட்டி வைத்து இருக்கின்றோம், விரும்பும் தொகையை செலுத்தி கொடியை வாங்கி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களிலும்  தேசிய கொடி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், ஆக 9 முதல் 15 ம் தேதி சுதந்திர தினவிழா பா.ஜ.க சார்பில் கொண்டாட சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில்  சிறுபான்மை என்.ஜி.ஓ கள் ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சட்ட விரோதமாக அழைத்து சென்று அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தை திறக்க அந்த பகுதி திமுகவினர் உதவி இருக்கின்றனர் என்று தெரிவித்தார். சிறுபான்மை மதத்தை சார்ந்த அந்த என்.ஜி.ஓ  நிறுவனங்கள் மீது இந்த அரசு நியாயமாக நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை எனக்கூறிய அவர், இதுவரை அந்த மையத்தில் இருந்து வெளியில் வந்தவர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியான  தகவல் இல்லை எனக்கூறிய அவர், மனிதர்களை கடத்தும் நிறுவனத்திற்கு திமுகவினர் உதவி வருகின்றனர், மனித உரிமையை மீறும் செயலுக்கு அரசு அதிகாரிகள் துணைபோகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட என்.ஜி.ஓ மீது கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதுடன், மீட்கபட்டவர்கள் அவர்கள்  குடும்பத்துடன் சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்த அட்டுக்கல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் ஆதரவற்றோர் பலரை விழுப்புரம் கொண்டு சென்று இருப்பதாகவும். இந்த குற்ற பின்னணியின் தன்மை குறித்து விசாரணை செய்ய வேண்டும்,கருணை பயணம், பிளஸ் இந்தியா நிறுவனம் ஆகியோர் மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு உருத்திர விட வேண்டும் எனவும், அரசு நடவடிக்கைகள் எடுக்க வில்லை எனில் பா.ஜ.க  தீவிரமான போராட்டம்  நடத்தும் எனவும் தெரிவித்தார்.

தேசிய கொடி ஏற்றுவதில் விதி முறைகள் திருத்தப்பட்டுள்ளன எனவும், கட்சி கொடி கம்பங்களிலும் ஏற்றலாம் எனவும் தேசிய கொடிக்கு மேலாக எதுவும் இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சாலைகள் மோசமாக இருக்கின்றன, ஓவ்வொரு முறையும் 200 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடப்பதாக, கவுண்டமணி, செந்தில் கதையாக அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கின்றார் எனவும் தெரிவித்த அவர் பணிகள் எங்கும் நடப்பதாக தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

கோவையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர், திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்ற கண்ணீர் வடிக்கும் நிலை இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: BJP, Coimbatore, DMK, Vanathi srinivasan

அடுத்த செய்தி