ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து : உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து : உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து : உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

எதனால் சிலிண்டர் வெடித்தது  எனவும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்து இருப்பதால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்று அனைத்து கோணங்களிலும்  விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore |

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை  4.15 மணி அளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை 4.15 மணிக்கு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சப்தம் கேட்ட பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

' isDesktop="true" id="823658" youtubeid="TOdjfkN3XNo" category="coimbatore">

இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

எதனால் சிலிண்டர் வெடித்தது  எனவும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்து இருப்பதால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்று அனைத்து கோணங்களிலும்  விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.அதிகாலை நேரத்தில் கார் வெடித்து சிதறிய சம்பவம்  அப்பகுதியில் பரபரபான சூழலை ஏற்படுத்தியது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Accident, Coimbatore, Gas cylinder blast