Home /News /coimbatore /

தமிழக எல்லைகளில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்.. கோவில்கள் சிறப்பு வழிபாடு

தமிழக எல்லைகளில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்.. கோவில்கள் சிறப்பு வழிபாடு

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

coimbatore | கோவை மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்களால்  ஓணம் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் இடங்களில்  இன்றைய தினம் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளாவை ஒட்டிய கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகை  கொண்டாட்டம் காலை முதலே களை கட்டியுள்ளது. அதிகாலையில்  எழுந்த மலையாள மொழி பேசும் மக்கள் குளித்து, புத்தாடைகள் அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் காலையிலேயே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில்,  ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம்  களையிழந்திருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் களைகட்ட தொடங்கி இருப்பதாகவும் கோவிலுக்கு வந்த  பக்தர்கள் தெரிவித்தனர். கொரொனாவிற்கு பிறகு கோவிலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஓணம் பண்டிகையின் சிறப்பே சத்யா உணவுதான் எனவும் இன்றைய தினம்  உறவினர்கள் வீடுகளுக்கு  வருவார்கள் என்பதால் கூடுதல்  மகிழ்ச்சி எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓணம் சத்யா உணவு வகையில் 28 விதமான ஆயிட்டங்கள் இருக்கும் எனவும் சாம்பார், காலன், ஒலான், பைனாப்பிள் பச்சடி , அவியல், துவையல் , பாயாசம், அடப்பிரதம் என பல வகைகள் இருக்கும் இந்த உணவு வகைகளை சாப்பிடவே ஒரு முறை இருக்கின்றது எனவும் அந்த முறைப்படி சாப்பிட வேண்டும் எனவும் கோவிலுக்கு வந்த பெண்கள் தெரிவித்தனர். பெரியவர்களும் குழந்தைகளும் இணைந்து  பூக்கோலமிடுவது, கதைகள் பேசியபடி உணவு சாப்பிடுவது என இன்றைய தினம் மகிழ்வாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Also see... தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை...

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் போது நிறைய போட்டிகள் நடக்கும் எனவும், பூக்களை  நேரடியாக சென்று பறித்து வந்து அத்தப்பூ கோலமிடும் அனுபவங்களும் , உணர்வுகளும் இங்கு கிடைக்க வில்லை என்றாலும் கோவையில் கொண்டாடும் ஓணம் பண்டிகையும் மகிழ்வையும், புது உணர்வையும்  கொடுப்பதாக ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள மலையாள மொழி பேசும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Kerala, Onam

அடுத்த செய்தி