ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. எம்.ஜி.ஆர் பாடலுக்கு பேருந்தில் மூதாட்டி உற்சாக நடனம் - வைரல் வீடியோ

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. எம்.ஜி.ஆர் பாடலுக்கு பேருந்தில் மூதாட்டி உற்சாக நடனம் - வைரல் வீடியோ

மூதாட்டி வீடியோ

மூதாட்டி வீடியோ

தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உற்சாகமாக பாடலுக்கு தகுந்தபடி உடலை அசைத்து நடனம் ஆடினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi | Coimbatore | Tamil Nadu

  பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் ஒலித்த எம்.ஜி.ஆரின் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து  பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

  அப்போது முன்னாள் முதல்வரும்  நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் பேருந்தில் ஒலித்து கொண்டிருந்தது.

  இதை கேட்ட படி பயணம் செய்த மூதாட்டி ஒருவர், தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உற்சாகமாக பாடலுக்கு தகுந்தபடி உடலை அசைத்து நடனம் ஆடினார். பேருந்தில் நின்ற படி பயணம் செய்த அவர் ஒற்றை கையில் சைகைகள் காட்டி உடலை அசைத்து நடனமாடினார்.
   
  View this post on Instagram

   

  A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)  இதனை கண்டு ரசித்த சக பயணிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Dance, Pollachi, Viral Video