ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஓசி பேருந்து வீடியோ விவகாரம் : மூதாட்டி மீது எந்த வழக்கும் பதியவில்லை - காவல்துறை விளக்கம்

ஓசி பேருந்து வீடியோ விவகாரம் : மூதாட்டி மீது எந்த வழக்கும் பதியவில்லை - காவல்துறை விளக்கம்

கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கும் மூதாட்டி

கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கும் மூதாட்டி

சமூக வலைதளங்களில்  மதுக்கரை மூதாட்டி மீது வழக்கு பதிவு என  பகிரப்படுகின்றது, அது  தவறான தகவல் - காவல்துறை விளக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி விவகாரம் தொடர்பாக வழக்கு எதுவும்  பதியப்பட வில்லை என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாயாரயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்  சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் வந்தார். அப்போது அவரிடம் மதுக்கரை முதாட்டி குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,சமூக வலைதளங்களில்  மதுக்கரை மூதாட்டி மீது வழக்கு பதிவு என  பகிரப்படுகின்றது, அது  தவறான தகவல் என தெரிவித்தார்.

மதுக்கரை காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக  வழக்கு எதுவும் பதியப்பட வில்லை எனவும் இதை அதிகார்வபூர்வமாக சொல்கின்றேன் எனவும் தெரிவித்தார்.இது தொடர்பாக எந்த  வழக்கும் கோவை மாவட்டத்தில் பதியவில்லை எனவும் ,தவறான தகவல் எப்படி பரவியது என்பது குறித்தும்  விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read : தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேலும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாக்குதல்  சம்பவங்களில் மேட்டுப்பாளையத்தில் 3 பேரும் ,பெள்ளாச்சியில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, பெண்கள் ஓசியில் பயணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு எதிர்வினையாக கோவையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்க மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

Published by:Vijay R
First published:

Tags: Coimbatore