Home /News /coimbatore /

வேலை இல்லாததால் கஞ்சா செடிகளை வளர்த்தேன்.. கோவையில் சிக்கிய வடமாநில இளைஞர்

வேலை இல்லாததால் கஞ்சா செடிகளை வளர்த்தேன்.. கோவையில் சிக்கிய வடமாநில இளைஞர்

கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த இளைஞர்

கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த இளைஞர்

Coimbatore district News : கோவை மாவட்டம் அன்னூரில் வீட்டிலேயே கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து, விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    கோவையில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்ந்து வந்த வடமாநில இளைஞரால் அதிர்ச்சி.

    கோவை அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவலர்கள் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவரது பெயர் ரபீன்ந்தர பரிடா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி தனியார் ஆலையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.இவர் கடந்த சில மாதங்களாக, தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு அருகே கஞ்சா விதைகளை தூவி கஞ்சா செடியை வளர்த்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சோதனை செய்ததில் சுமார் மூன்று மாதமாக  வளர்க்கப்பட்டு வந்த  கஞ்சா செடிகள் இருப்பது தெரிய வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கஞ்சா  விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால், கஞ்சா செடி பயிரிட்டதாகவும் அதனை விற்பனை செய்ய முயன்ற போதுதான் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    Must Read : கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு... உங்களுக்கு தகவல் கிடைத்தால் இந்த எண்ணுக்கு தெரிவியுங்கள்... அரசு வேண்டுகோள்

    இந்நிலையில், ரபீன்ந்தர பரிடாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். கோவையில் வடமாநில இளைஞர் வீட்டிலேயே கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்த துணிகர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - எஸ்.யோகேஸ்வரன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Coimbatore, Crime News, Ganja

    அடுத்த செய்தி