ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji | நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் போதெல்லாம், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் வாயே திறந்ததில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் முதலில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தான் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை நடத்த வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

  கோவையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முக்கிய காவல் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாகவே வெடி விபத்து சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கோவையில் இயல்பு நிலை திரும்பியது. கார் வெடிப்பு சம்பவத்தின் மூலம் ஒரு சிலர் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர். அத்தகைய நபர்களுக்கு ஊடகங்கள் இடமளிக்க கூடாது” என வலியுறுத்தினார்.

  மேலும், “மக்கள் நலனுக்காக போராட பாஜக தயங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே அவர்கள் செயல்படுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் போதெல்லாம், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் வாயே திறந்ததில்லை. அதைப்பற்றி ஏன் அண்ணாமலை பேசவில்லை. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் யார் குற்றவாளிகள் என்பதை காவல்துறை வெளியிடுவதற்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிகிறது என்றால் முதலில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தான் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை நடத்த வேண்டும்” எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP, Coimbatore, Kovai bomb blast, Minister, Senthil Balaji