ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்.. வெளிவருமா உண்மை?

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்.. வெளிவருமா உண்மை?

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore | இன்றோ அல்லது நாளையோ தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கை நேரடியாக எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

  கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட இந்த அதிகாரிகள் நேற்றிரவு கோவை சென்றடைந்தனர்.

  இதையும் படிங்க | ஆதாரம் இல்லாமல் கணவன் மீது பழிப்போடுவதும் கொடுமைதான் - மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  தொடர்ந்து, கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். இன்றோ அல்லது நாளையோ தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கை நேரடியாக எடுத்து விசாரிக்கவுள்ளனர். விசாரணைக்கு பிறகே உண்மை என்ன என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Crime News, NIA