ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்..! காவல்துறைக்கு தெரிவித்த தாய்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்..! காவல்துறைக்கு தெரிவித்த தாய்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை கார் வெடிப்பு வழக்கில் ஜமீசா முபீனுடன் சிசிடிவியில் இருந்தவர்கள் பற்றி பெண் ஒருவர் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

  கோவையில் கடந்த 23 ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் சார்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 27ம் தேதி என்.ஐ.ஏ வழக்கு பதிந்தது. இந்த நிலையில் என் ஐ ஏ இன்று களத்தில் இறங்கி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

  கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.சிசிடிவி காட்சியில் இருந்த பெரொஸ் இஸ்மாயில், நவாஸ், ரியாஸ் ஆகியோரை அவரது தாயார் அனுப்பி வைத்துள்ளார்.  பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் ஆகியோர் சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

  Also Read: முதல் கல்யாணம் நிலைக்காது.. ஆசை காதலனுக்கு ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி - இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

  இருதய நோயாளியான ஜமீஷா முபீன் , வீட்டை மாற்ற உதவி கேட்டதால் தனது மகன் பெரோஸ் மற்றும் நிவாஸ் ஆகியோரையும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரியாஸ் ஆகியோரையும் அனுப்பி வைத்துள்ளார். வீட்டில் இருந்த துணிமூட்டைகள் , பொருட்களை எடுக்க உதவ வேண்டும் என்று கேட்டதால் உதவி செய்வதற்காகவே அனுப்பி வைத்துள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளி வந்தவுடன்  அந்தப்பெண் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Coimbatore, Tamil News