ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தாய் கொடூரமாக தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு...

தாய் கொடூரமாக தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு...

தாய் கைது

தாய் கைது

Coimbatore | கோவையில் 2 வயது குழந்தையை பெற்ற தாயே அடித்து சித்ரவதை செய்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை போத்தனூரில்  தாய் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 வயது குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்தவர்கள் முகமதுரபீக் - தில்சாத் பானு தம்பதி. முகமது ரபீக் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். முகமதுரபீக் - தில்சாத் பானு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இரண்டு வயது குழந்தையை தில்சாத் பானு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் குழந்தை காயம் அடைந்த நிலையில், குழந்தை விளையாடும் போது கீழே விழுந்து விட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Also see... தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

குழந்தையின் உடலில் இருந்த காயங்களை பார்த்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனையடுத்து போலீசார் தில்சாத் பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Child, Coimbatore, Dead, Mother