Home /News /coimbatore /

கோவையில் விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

கோவையில் விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

கோவை -  விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் சாலை மறியல்

கோவை - விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் சாலை மறியல்

Coimbatore | கோவையில் விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய  அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக  கோவை ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி  விதிப்பை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதே போல கோவை காந்தி பார்க் பகுதியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Also see... காங்கிரஸ் மாபெரும் போராட்டம்..ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது

இரு இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின்  போது மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள்  எழுப்பபட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Coimbatore, Congress, Protest

அடுத்த செய்தி