கோவையில் பிரதமர்
மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் ' தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்களுடன்
பாஜகவினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவை லங்கா கார்னர், டவுன்ஹால் உட்பட பல இடங்களில் பா.ஜ.க சார்பில் சிவா என்பவர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பிரதமர் புகைப்படம் மற்றும் பாஜக கொடியுடன் உள்ள பெரிய போஸ்டர்கள் நகரின் பல இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் பிரதமர் செஸ் விளையாடுவது போல புகைபடம் இடம் பெற்றுள்ளதுடன் "தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பின்னர் 29ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் அகமதாபாத் சென்றார். தமிழகம் வந்த பிரதமரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நடந்த செஸ் ஒலிம்பியாடின் தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும், மேடையில் இணக்கமாக பேசியது, “தமிழகத்தில் இதே கூட்டணி தொடரும். இது தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி” என்று விளக்கமளிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் பேசப்பட்டது. அதுமட்டுமில்லமல் அதிமுகவும் உட்கட்சி பிரச்சனையில் தற்போது அகப்பட்டுள்ளதால், இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோயம்பத்தூர் செய்தியாளர் குருசாமி
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.