கோவையில் நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பெண்கள் ஒய்யார நடைபோட்டு அசத்தியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றனர்.
போட்டியாளர்கள், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் சனம் செட்டி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
Also see... இன்று முதல் சூறாவளிக்காற்று.. எங்கெல்லாம் மழை - வானிலை அலெர்ட்!
இதில், மிஸ் தமிழ்நாடு பட்டத்தை 21 வயதான அக்ஷதா தாஸ் வென்றார். அவருக்கு மிஸ் தமிழ்நாடு போட்டிக்கான கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
செய்தியாளர்: ஜெரால்ட், கோவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Tamil Nadu