கோவையில் இன்று 70 ஜோடிகளுக்கு நடந்த சுயமரியாதைத் திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் புது மணமக்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “இங்கு நடந்தது சுயமரியாதை திருமணம். அந்த காலத்தில் இந்த மாதிரியான சுயமரியாதை திருமணத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அதனை முன் மொழிந்தவர் அறிஞர் அண்ணா. அதனால் தான் தொடர்ந்து கலைஞரும், முதலமைச்சரும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வருகின்றனர். யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
மணமக்கள் அதிமுக, பாஜக போல் இருக்காதீர்கள். யாருடைய காலிலும் விழாதீர்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும். தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம்.
ஆனால் எப்போதும் உங்கள் உரிமையை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள். இங்கு வந்துள்ள மணமக்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன். உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள்.
கொஞ்சம், கொஞ்சமாக இந்தி மொழியை கொண்டு வருகின்றனர். தற்போது என்ன பெயர் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சிலர் வாயில் நுழைய முடியாத அளவுக்கு பெயர்களை வைக்கிறார்கள். எனவே சுத்தமான தமிழ் பெயர் வையுங்கள். வீட்டில் அனைவரும் அரசியல் பேச வேண்டும்” என்று அவர் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, DMK, Local News, Udhayanidhi Stalin