ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை சாலையில் நடந்த விபத்து.. காரை நிறுத்தி உதவி செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை சாலையில் நடந்த விபத்து.. காரை நிறுத்தி உதவி செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் செந்தில் பாலாஜி

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் செந்தில் பாலாஜி

விபத்தில் சிக்கி காயம் அடைந்து சாலையின் ஓரத்தில் இருந்த மூன்று பேரை அமைச்சர் செந்தில் பாலாஜி மீட்டு தனது பாதுகாவலர்களின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று 8 திட்டப்பணிகளை துவங்கி வைத்தார். இதற்குப் பின்னர் மீண்டும் விமான மூலம் சென்னை செல்ல பொள்ளாச்சியில் இருந்து தனது வாகனத்தில் பாதுகாவலர்களுடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

  அப்போது கோவை-பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு அருகேயுள்ள ஏலூர் பிரிவில் விபத்தில் சிக்கி சாலையில் இருந்த முதியவர் உட்பட மூன்று பேரை பார்த்து வாகனத்தை நிறுத்தினார்.

  தொடர்ந்தவர் காயங்களுடன் சாலையின் ஓரத்தில் இருந்த 3 பேரை தனது பாதுகாவலர்களின் வாகனத்தில் ஏற்ற அனுமதி வழங்கி காயம் அடைந்தவர்களை வாகனத்தில் ஏற்றினார்.

  இதையடுத்து அமைச்சரின் பாதுகாவலர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவமனைக்கும் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின்போது அமைச்சருடன் மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

  Also see... அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கு.. கிஷோர் கே சாமி கைது!3

  அமைச்சர் செந்தில் பாலாஜி சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  செய்தியாளர்:ஜெரால்ட் , கோவை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Coimbatore, Road accident, Senthil Balaji