ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு.. அண்ணாமலையை தான் முதலில் விசாரிக்கனும் - அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

கோவை கார் வெடிப்பு.. அண்ணாமலையை தான் முதலில் விசாரிக்கனும் - அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

அண்ணாமலை செந்தில் பாலாஜி

அண்ணாமலை செந்தில் பாலாஜி

அரசியல் ஆதாயத்தை தேட சிலர் கோவை சம்பவத்தை பயன்படுத்துகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவை கார் வெடிப்பு வழக்கில் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தவர்கள் யார் என என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

  கோவையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை சம்பவத்தின் தீவிரத்தன்மையை கருதியே முதலமைச்சர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார் என்றும், பிறர் கூறியதால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற முடிவு செய்ததாக கூறுவது தவறு என தெரிவித்தார்.

  மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 12 மணி நேரத்தில் துப்பு துலங்கியது என்றும், காவல்துறை வெளிப்படையாக செயல்பட்டு கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்தது.போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கோவையில் அமைதியை நிலைநாட்டியது காவல்துறை என வெகுவாக பாராட்டி பேசினார். மேலும், கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிமாநிலத்தவர்களின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

  இதையும் படிங்க | கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

  அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கூறும் கருத்துகளுக்கு ஊடகங்கள் துணை போக கூடாது என கூறிய அவர், கோவையில் பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், அரசியல் ஆதாயத்தை தேட கோவை சம்பவத்தை பயன்படுத்துகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

  தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலையை தான் என்.ஐ.ஏ முதலில் விசாரிக்க வேண்டும் என்றும், அண்ணாமலைக்கு யார் முதலில் தகவல் தெரிவித்தார்கள் என விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Senthil Balaji