ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

50 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்த காட்டு யானை.. மேட்டுப்பாளையத்தில் அட்டகாசம்

50 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்த காட்டு யானை.. மேட்டுப்பாளையத்தில் அட்டகாசம்

காட்டு யானை அட்டகாசம்

காட்டு யானை அட்டகாசம்

Mettupalayam Elephant News | ஒற்றை காட்டு யானை அட்டகாசத்தால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மேட்டுப்பாளையம் அருகே  விவசாயம் நிலத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தோலம்பாளையம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இதனால் வனப்பகுதியில் வசிக்கும் யானை,மான்,காட்டுப்பன்றி,காட்டெருமை உள்ளிட்ட இருந்து உணவுக்காகவும்,தண்ணீருக்காகவும் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தோலம்பாளையத்தை அடுத்துள்ள போத்தன்படுகை பகுதியில் இன்று அதிகாலை வெள்ளியங்கிரி என்பவரது தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை உடைத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்தது.பின்னர்,அதன் குருத்தை உட்கொண்டுள்ளது.மேலும்,தோட்டத்து வீட்டின் முன்புறம் வாழை,பப்பாளி மரங்களையும் முறித்து சேதப்படுத்தியுள்ளது.

பின்னர்,வெள்ளியங்கிரி தோட்டத்தில் இருந்து வெளியேறிய யானை, ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் அங்கு பயிரிடப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து நாசப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை காட்டு யானையை பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட விவசாயி ராஜேந்திரன்,ஒற்றை காட்டு யானை அட்டகாசத்தால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்,இதனால் தாங்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும்,வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் : யோகேஸ்வரன்

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News