முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

மேட்டுபாளையம்- வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள்

மேட்டுபாளையம்- வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள்

Mettupalayam | மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி இரவிலும் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mettupalayam, India

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு  மேட்டுப்பாளையம்,  சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏழை எளிய  மக்கள்  1000 க்கும் மேற்பட்டோர் தினசரி வெளி நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் தலைமையில் இரண்டு மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், எலக்ட்ரீசியன், சலவை தொழிலாளி, சமையல் என  ஒப்பந்த அடிப்படையில் 25  தொழிலாளர்கள் சுமார் ஒரு ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூபாய் 230.00 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கடந்த 14. 6 .22 ஆம் தேதி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூபாய் 606.00 ஊதியமாக நிர்ணயம் செய்து வழங்க உத்திரவிட்டுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த ரூபாய் 606.00ஐ ஊதியமாக வழங்காமல் அவர்களுக்கு தினசரி ரூபாய் 230.00 தான் ஊதியமாக வழங்கப்பட்டு வருவதா கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் உட்பட 16 ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்த ரூபாய் 606.00 ஊதியமாக வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைத்திட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தனியாக ஓய்வு அறை அமைத்து தர வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி, பாதுகாப்பு பணி ஆகியவை பாதிக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் மாலதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறாமல்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரர் நேரில் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்.

Also see... திருமங்கலத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சி- வடமாநில இளைஞர்கள் அட்டூழியம்

அதுவரை எங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். விடிய விடிய நடைபெற்று வரும் ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன், மேட்டுபாளையம்

First published:

Tags: Cleaning workers, Govt hospital, Mettupalayam, Work Strike