முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 50 பேர் கைது

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 50 பேர் கைது

எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர்

எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர்

CPM Protest : கோயம்புத்தூரில் காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் எந்த பகுதிக்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த மாதம் அறிவித்திருந்தது. உதகையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே சிட்ரா பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். கருப்பு கொடியுடன் வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.

காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி  அக்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் விமான நிலையம் செல்லும் சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. சிட்ரா பகுதியில் இருந்து விமான நிலையம் செல்லும் பாதை வரை  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் : குருசாமி - கோவை

First published:

Tags: Coimbatore, CPM, Local News, RN Ravi