முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / சந்தன மரம் கடத்தல் - வனத்துறையை திசை திருப்ப காட்டிற்கு தீ வைத்த நபர் கைது

சந்தன மரம் கடத்தல் - வனத்துறையை திசை திருப்ப காட்டிற்கு தீ வைத்த நபர் கைது

கைதான ராஜிவ்காந்தி

கைதான ராஜிவ்காந்தி

சந்தன மரக்கட்டைகளை வனப்பகுதியில் இருந்து கடத்துவதற்கு வனத்துறையினரை திசை திருப்ப அக்காமலை புல்வெளியில் தீ வைத்த நபரை கைது செய்து சிறையில் அடைப்பு..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pollachi, India

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குட்பட்ட வால்பாறை அக்காமலை வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காட்டு தீ ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான வனத்துறையினர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

அக்கா மலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினால் பல கிலோமீட்டர் பரப்பளவில் செடிகளும் மரங்களும் தீயில் கருகி சேதமடைந்தது. மேலும்  வனப்பகுதியில் வாழும் சிறிய சிறிய பூச்சி வகைகளும் இந்த தீயில் சிக்கி உயிரிழந்துள்ளன. மேலும் தற்பொழுது கோடை காலம் நிலவி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு மலை பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டு அந்த தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர்..

இதனால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்பொழுது அனைத்து வனப்பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு காய்ந்த வனப்பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெடிகாரன்பாலி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்ததைக் கண்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் விசாரணை  மேற்கொண்டதில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த சாக்கு பையை வனத்துறையினர் சோதனை செய்தபோது சாக்கு பையில் சந்தன கட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த நபரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் வெட்டி கடத்தி வந்ததும் இந்த கடத்தலில் வனத்துறையிடம் சிக்காமல் இருக்க அவர்களை திசை திருப்பும் நோக்கில் வால்பாறை அருகே உள்ள அக்கா மலை வனப்பகுதியில் இவர் தீ வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவர் வைத்திருந்த சாக்குப்பையில் இருந்த சுமார் 16 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து அவர் மீது வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

First published: