Home /News /coimbatore /

கோவையில் கஞ்சா சாக்லெட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது...

கோவையில் கஞ்சா சாக்லெட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது...

 கஞ்சா சாக்லெட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது..

கஞ்சா சாக்லெட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது..

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லெட் விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேத்தன் என்ற நபரை ஆர்.எஸ்.புரம் போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட்டை ஆர்.எஸ்.புரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களை  குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கஞ்சாவை நேரடியாக விற்பதை விட சாக்லேட் வடிவில் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவதை அறிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாகவும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக  கிடைத்த  தகவலை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது ரெங்கே கவுடர் வீதியில் உள்ள டீக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேத்தன் என்பவர் கஞ்சா சாக்லெட்டுகளை விற்று வருவது தெரியவந்தது. இதனையடுத்து வடமாநில இளைஞர் சேத்தனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் சேத்தனுடன் சிலர் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா சாக்லேட் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கஞ்சா சாக்லெட்டை பயன்படுத்துபவர்களுக்கு  சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

Also see... திருமணமான 3 மாதத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..

கஞ்சா சாக்லெட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனைகளை  மேலும் தீவிரப்படுத்த காவல் நிலையங்களுக்கு மாநகர காவல் ஆணையர்  பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cannabis, Coimbatore

அடுத்த செய்தி