முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை மக்களை கதிகலக்கிய மக்னா யானை பிடிபட்டது.. நிம்மதியில் மக்கள்!

கோவை மக்களை கதிகலக்கிய மக்னா யானை பிடிபட்டது.. நிம்மதியில் மக்கள்!

மக்னா யானை பிடிபட்டது

மக்னா யானை பிடிபட்டது

Coimbatore elephant | கடந்த 3 நாட்களாக கோவையை கலங்கடித்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை பேரூர் அருகே மக்னா யானைக்கு இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வனத்துறை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு,6 ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு மேல் பல்வேறு பகுதியில் சுற்றி நேற்று கோவை பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை பகுதிக்கு வந்தது. பின்னர் மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் அருகே உள்ள பி கே புதூர் பகுதிக்கு சென்றது. அந்தப் பகுதியில் உள்ள முள் புதரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வலம் வந்தது. பின்னர் ஒன்பது மணிக்கு மேல் அந்தப் பகுதியில் இருந்து சென்று இடையர்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் சென்றது. பிறகு நேற்று அதிகாலை மூன்று மணி வரை வனத்துறை பார்வையில் இருந்த யானை கண்காணிப்பில் இருந்து விலகியது.

பின்னர் நேற்று காலை புட்டு விக்கி செல்வபுரம் தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து பேரூர் பகுதிக்கு வந்தது. பேரூர் பகுதியில் உள்ள எஸ் எம் எஸ் கல்லூரி அருகே உள்ள புதருக்குள் மறைந்தது. தொடர்ந்து வனத்துறையினர் இந்த பகுதியில் வைத்து யானையை ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டனர். மக்னா ‌ யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி துவங்கியது. அதற்காக காட்டு யானை இருக்கும் பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட முன்னாள் கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையில் மயக்கம் ஊசி செலுத்துவதற்காக துப்பாக்கியுடன் சென்றனர். அதேபோல இந்த குழுவில் சுகுமாரன், பிரகாஷ் ஆகிய மருத்துவர்களும் இருந்தனர்.

யானை தப்ப முயற்சி செய்ததால் வனத்துறையினர் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட முறை பட்டாசு விட்டனர்.

வனத்துறை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் யானைக்கு 4 முறை ஊசி செலுத்த சுட்டனர். இதில் இரண்டு முறை ஊசி யானையின் மீது பட்டது. மக்னா யானைக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் கும்கி சின்ன தம்பி யானை உதவியுடன் மக்னா யானை பிடிப்பட்டது.

வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.சுமார் ஐந்து கிலோ வரை எடை கொண்ட எலிபாண்ட் காலர் என்ற இந்த ரேடியோ காலர் வனத்துறையினரால் யானைக்கு பொருத்தப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த யானையை வனத்தில் விட்டாலும் எளிதாக கண்காணிக்க முடியும்.யானையை தெங்குமராடா மங்கள்பட்டு என்ற பகுதியில் விடுகின்றனர். அப்போது யானை வனத்தை விட்டு வெளியே வரும்பச்சத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் எளிமையாக கண்காணிக்கப்பட்டு மீண்டும் வனத்திற்குள் விரட்ட முடியும்.

கோவையில் மதுக்கரை குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை பிடித்து காரமடை அடுத்த முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் லாரி தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வந்த நிலையில்  மேட்டுப்பாளையம் அரசு மரக்கடங்கு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சற்று மயக்கம் தெளிந்த நிலையில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி யானையை கண்காணித்து வந்தனர். யானை தற்போது மேட்டுப்பாளையம் அரசு மரக்கடங்கு வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட மக்னா யானையை இரண்டு மணி நேரம் ஓய்வுக்கு பின் வனத்துறை பாதுகாப்புடன் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

செய்தியாளர்: சுரேஷ், தொண்டாமுத்தூர்.

First published:

Tags: Coimbatore, Elephant, Local News