ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

சாலையில் ஆக்ரோஷமாக நடமாடும் சிறுத்தை.. பொள்ளாச்சி வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

சாலையில் ஆக்ரோஷமாக நடமாடும் சிறுத்தை.. பொள்ளாச்சி வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

சிறுத்தை

சிறுத்தை

Pollachi leopard | சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் எடுத்த சிறுத்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi | Coimbatore | Tamil Nadu

  பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மலுக்கு பாறை அதிரப்பள்ளி சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் மலுக்குபாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லும் பொழுது சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதை கண்டு அவரது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

  சிறுத்தையை கண்ட சுற்றுலா பயணிகள் மலக்குப்பாறை சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க | கோவை: அயன் படத்தை மிஞ்சும் சம்பவம்.. உள்ளாடைக்குள் நகைகள்.. ரகசிய தகவலால் சிக்கிய 12கிலோ தங்கம்!

  வனத்தைவிட்டு வெளியேறிய அந்த சிறுத்தை  ஆக்ரோஷமாக சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டுமெனவும், செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.

  சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் எடுத்த சிறுத்தையின் வீடியோ வைரலான நிலையில், வனத்துறையினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Leopard, Pollachi