ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

விளம்பரம், சினிமா.. இப்போ பாலிடிக்ஸ்.. அதிரடி அரசியல் அப்டேட்டை சொன்ன லெஜெண்ட் சரவணன்!

விளம்பரம், சினிமா.. இப்போ பாலிடிக்ஸ்.. அதிரடி அரசியல் அப்டேட்டை சொன்ன லெஜெண்ட் சரவணன்!

அருள் சரவணன்

அருள் சரவணன்

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சரவணன் முன்பு கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான அருள் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர் சரவணன் நடிப்பில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் அன்று வெளியாகி கலவை விமர்சனங்களைப் பெற்றது. சைன்டிஸ்ட் கேரக்டரில் நடித்த சரவணன் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தனது லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கான விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற சரவணன், தி லெஜெண்ட் படத்தின் மூலம் நடிப்பில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்.

தி லெஜெண்ட் படத்தில் சரவணனுடன் ஊர்வசி ரவுத்தலா, பிரபு, நாசர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜேடி – ஜெர்ரி இயக்கிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். பாடல்கள் மெகா ஹிட்டாகி, படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடித் தந்தன.

இந்த நிலையில் சரவணன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சரவணன் முன்பு கூறியிருந்தார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அடுத்த திரைப்படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகக் கூறினார். மேலும் தான் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் மகேசனின் கையில் இருப்பதாகவும் அருள் சரவணன் தெரிவித்தார்.

First published:

Tags: Cinema, Legend Saravanan, Politics